Kogilavani / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறை 13மைல் கனவரல்லைப் பிரதேசத்தை, தனிமைப்படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிப்பதற்கு ஆலோசித்து வருவதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதாரப் பரிசோதகர் வி.இராஜதுரை தெரிவித்தார்.
மேற்படிப் பிரதேசத்தில் இதுவரை 16 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 95 குடும்பத்தினர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பங்களைத் தவிர்ந்த 195 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மேலும் கொரோனா தொற்றுப் பரவாமல் இருப்பதற்கான சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எனவே, தனிமைப்படுத்தலிலிருந்து இப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஆலோசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026