2025 ஜூலை 05, சனிக்கிழமை

கம்பளையில் மண்சரிவு: மாணவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட ஆண்டியாகடவத்தை அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் இன்று (4) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாடசாலையின் பிரதான  வகுப்பறைக்  கட்டடம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இதன்காரணமாக,  மாணவர்களை வேறு வகுப்பறைகளுக்கு இடமாற்ற வேண்டியுள்ளதாகவும் பாடசாலையில் இடப்பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் மாணவர்களை இடமாற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். நுஹ்மான் தெரிவித்தார்.  

இவ்விடயத்தை கம்பளை வலய கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .