2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கயிறிழுத்தவர் மரணம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, வில்கமுவ அமுனுயாய பிரதேசத்தில் நடைபெற்ற புதுவருட விளையாட்டுப் போட்டியின்போது, கயிறிழுத்தல் போட்டியில் பங்கேற்ற 43 வயது நபரொருவர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக, மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறுப் போட்டிகளில் பங்கேற்ற மேற்படி நபர், இறுதியாக கயிறிழுத்தல் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

கயிறிழுத்துக் கொண்டிருந்தபோது திடீர் சுகயீனமுற்ற இவரை, வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரழந்ததாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாரடைப்பினாலேயே இம் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .