R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை - ஆரியபுர பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில், சுகாதார விதிமுறைகளை மீறி, இடம்பெறவிருந்த திருமண நிகழ்வொன்று, பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால், இன்று (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா மற்றும் டெல்டா தொற்று காரணமாக, திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த திருமண மண்டபத்துக்கு விரைந்த பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார், அங்கு கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.
அத்துடன், மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் மாத்திரம் திருமணத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளரும் பொலிஸ்
நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago