2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கற்பாறை சரிந்து விழும் அபாயம் காரணமாக 15 குடும்பங்கள் வெளியேற்றம்

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை மாவட்டத்தில் உக்குவலை ஒவில்ல என்ற கிராமத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய கற்பாறை சரிந்து விழும் அபாயம் உள்ளதால் அக்கிராமத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 42 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக மாத்தளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாவது,

குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களின் 42 அங்கத்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடமொன்றுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்களுக்குத் தேவையான உலருணவுகளை வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ், இது தொடர்பாகத் தெரிவிக்கையில் மேற்படி பாறையை அகற்றி பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .