Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
கலஹா வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், 1.95 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாந்தனி சமரசிங்க, ஒரு மாதத்துக்குள், இந்த வைத்தியசாலையை மீளத் திறக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கலஹா வைத்தியசாலையைத் திறக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள், நேற்று முன்தினம் (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கூறிய அவர், வைத்தியசாலையின் திருத்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனவெனவும், வெகுவிரைவில் வைத்தியசாலை, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் யன்னல்கள், கதவுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை
சேதப்படுத்தப்பட்டுள்ளனவெனக் குறிப்பிட்ட அவர், அவற்றை மீளத் திருத்தும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
சிறியளவிலான திருத்தப் பணிகளே எஞ்சியுள்ளனவெனவும், அவற்றை ஒரு மாத காலப்பகுதிக்குள் சீர்செய்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கலஹா வைத்தியசாலையில், கடந்த 28ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பிரதேச மக்கள், கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலையும் மூடப்பட்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.
10 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago