2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கல்கந்தவத்தை தோட்ட இளைஞனுக்கு தொற்று

Kogilavani   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

கொட்டகலை பிரதேசசபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கல்கந்தவத்தை தோட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. 

குறித்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞன், நானுஓயா வங்கிஓயா தோட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து இளைஞனின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞன் தனிமைப்படுத்தல் சிகிச்சை மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X