Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், நடிகர் எம். ஜி. ஆரின் 100ஆவது ஜனன தின நிகழ்வு, செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில், கண்டி தமிழ் வர்த்தக சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த நிகழ்வில், தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்கள் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
“இந்த விழாவை கொழும்பில் நடத்துவதற்கு வசதிகள் இலகுவாக இருந்த போதிலும், எம். ஜி. ஆர் கண்டியில் பிறந்தவர் என்ற காரணத்தால் கண்டியிலே நடத்துவதே சிறப்பனதாக அமையும் என கருதினோம். அதற்கமைய, கண்டியில் நடத்துவதற்கான பூரண ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago