Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலுள்ள அனைத்து நாடுகளின், கல்வித் தலைவர்களும் கல்விப் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளும் “சர்வதேச கல்வி உச்சி மா நாடு”
இந்தியா, புதுடெல்லியில் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும், இந்தியா, புதுடெல்லிக்கு நேற்று பயணம் செய்தார்.
இந்த மகா நாட்டில் உலக நாடுகளின் தலைவர்களினதம் பிரதிநிதிகளினதும் உரைகள் இடம்பெறுவதுடன் உலகின் கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள்¸ பின்னடைவுகள்¸ அதனை எதிர்நோக்க ஏற்பட்டுள்ள சவால்களும் அதற்கான தீர்வுகள்¸ இரு நாடுகள் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக எவ்வாறு இணைந்து செயற்படுவது போன்ற இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடபடவுள்ளன.
இம்மாநாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், “உலக கல்வியில் புதுமைகளை புகுத்தல், இலங்கை கல்வியில் சமகால அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் உரையாற்ற உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .