2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’களவாடப்பட்ட தலைமுறைகளின் கதை’ நூல் வெளியீட்டு விழா

Freelancer   / 2023 ஜூலை 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தரணி நேரு கருணாகரனின், 'களவாடப்பட்ட தலைமுறைகளின் கதை' எனும் நூல் வெளியீட்டு விழா, ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி  சனிக்கிழமை   காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

 ‘தினக்குரல்’ பத்திரிகையில் 2012-2015 வரையான காலப்பகுதியில் 'வாரம் ஒரு சினிமா' பகுதியில் வெளிவந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய கட்டுரைகளில் 32 கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு 'களவாடப்பட்ட தலைமுறைகளின் கதை’ நூலாக வௌயிட்டு வைக்கப்படவுள்ளது.

காட்சி மொழி பதிப்பகத்தால் நூலுருவாக்கம் பெற்றுள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவுக்கு சட்டத்தரணி க.விநாயகமூர்த்தி தலைமைதாங்கவுள்ளார். நூல் அறிமுகவுரை தனராஜ் கஜேந்திரகுமாரும் (ஆணையாளர், பண்டாரவளை மாநகர  சபை), கருத்துரையை வே. தினகரன் (அதிபர்,  சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயம்),  சு. விஜயகுமார் (சட்டத்தரணி, காவத்தை, இரத்தினபுரி), யட்டியாந்தோட்டை கருணாகரன் (அதிபர், கந்தோலாயா தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோர் வழங்கவுள்ளனர். நிகழ்வுகளை ஜோதிராஜ் ஜெகன் தொகுத்து வழங்குவார்.

எம். கிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X