R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
அடை மழை காரணமாக, பிபில- மெதகம பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொடபோவ கிராம சேவையாளர் பிரிவிலுள்ள களுகஹவாடிய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் அப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலம் ஊடாக, அப்பிரதேசவாசிகள் களுகவாடியிலிருந்து மறுபுறம் உள்ள களுகவாடிக்கு பயணித்துள்ளனர்.
இந்த பாலம் பலமுறை சீரமைக்கப்பட்டும் முறையான கட்டுமானம் இல்லாததால் கனமழையால் உடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீரமைப்பு பணியின் போது தரமான கம்பி மற்றும் கொன்கிரீட் பயன்படுத்தாததால் இப்பாலம் உடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், மெதகம பிரதேசசபையின் தவிசாளர் ரஞ்சித் பியதிகமவிடம் வினவியபோது,
தம்ம ஓயாவின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுகவாடி பாலம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டது. மழைக் காலங்களில் தஹமல் ஓயாவில் இருந்து பாயும் தண்ணீர் இந்த பாலத்தின் வழியாக செல்கிறது. இந்த பாலம் நீர்நிலையை தாங்கவே முடியாது.இது பலமுறை உடைந்ததுடன், இரண்டு முறை புனரமைக்கப்பட்டது.. .
அதற்கான பணத்தை உள்ளூராட்சி சபையால் செலவிட முடியவில்லை.இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பெரிய பாலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், கட்டுமான பணி தாமதமானது என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago