2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

கழுத்து நெரித்து மாணவி கொலை: தந்தையின் நண்பன் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடையில், கடந்த 22ஆம் திகதி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, நேற்று (26), பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறக்குவான பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையிலேயே, இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பலாங்கொடை, ஓலுகந்தோட்ட கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த குறித்த மாணவி, தனது வீட்டிலேயே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். மாணவியின் தந்தை, தொழிலுக்காக ​வெளியில் சென்றிருந்த நிலையில், தாயும் மாணவியின் சகோதரனும் வீட்டில் இருக்காத நேரத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தந்தையின் நண்பன் என்ற உறவோடு இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ள நபரே, கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய், சந்தேக நபர் ஆகியோரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, தான் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்வாசல் வழியே, ஒரு நபர் ஓடியதைக் கண்டதாக, தாய் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .