2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கழுத்து வெட்டப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
 
பதுளை அட்டாம்பிட்டிய தோட்டத்தில், கழுத்து வெட்டப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
 
மேற்படித் தோட்டத்தின் 19ஆம் இலக்க தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்த சிவசாமி ஜெயராம் (வயது 57) என்ற தொழிலாளியே, இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.  
 
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில், பங்களாகொடவத்தைப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
தனிப்பட்ட பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
இச்சம்வம் தொடர்பில், அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்த ரணசிங்க தலைமையிலான குழுவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X