Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேயிலைச் சபைக்கு மாதாந்தம் 10 இலட்சம் ரூபாய் வீதம் வரிப்பணம் செலுத்திகின்ற போதிலும் கழிவுத் தேயிலையை மீள் உற்பத்தி செய்பவர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை என உடுநுவர, கழிவுத் தேயிலை மீள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உடுநுவரவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேற்படி சங்கத்தின் தலைவர் எஸ்;.எம்.எஸ்.சபான் கருத்து தெரிவ்ககையில், 'ஆரம்பத்தில் தேயிலை மீள் உற்பத்தியில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனபோதிலும் அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசாங்கம் வழங்க தவறியமையால் தற்போது குறிப்பிட்ட சிலரே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
'இத்தொழிலில் ஈடுபடுவதற்காக தேயிலைச் சபையிலிருந்து 28,500 ரூபாய் பணத்தை செலுத்தி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பத்திரத்தை வருடா வருடம் புதுப்பிப்பதற்காக தேயிலைச் சபைக்கு வருடத்துக்கு 9,000 ரூபாய் செலுத்த வேண்டும். இத்தொழிலில் ஈடுபவர்களினால் வருடாந்தம் 7 கோடி ரூபாய்க்கும் மேலதிகமான வருமானத்தை தேயிலைச் சபை பெற்றுகொள்கின்றது.
வருடாந்தம் இத்தகைய வருமானத்தை அரசாங்கத்துக்கு பெற்றுகொடுக்கின்ற போதிலும் அரசாங்கத்தினால் எவ்வித நிவாரணங்களோ அல்லது வருமானமோ கழிவுத் தேயிலை மீள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைப்பதில்லை' என தெரிவித்தார்.
எனவே, இவ்விடயம் குறித்து அரசாங்கமானது கவனம் செலுத்த வேண்டுமென கழிவுத் தேயிலை மீளுற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025