Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மஸ்கெலியா ஹொரணப் பிளான்டேஷனுக்கு உட்பட்ட சாமிமலை கவரவல தோட்டப் பிரிவைச் சேர்ந்த 400 தொழிலாளர்கள், இன்று (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தோட்டத்தின் உள்வீதிகள் செப்பனிடப்பட வேண்டும்; தோட்டத்தில் அம்பியூலன்ஸ் வண்டிச் சேவையை விஸ்தரிக்க வேண்டும்; தேயிலைத் தோட்டங்கள் காடாகிக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும்; தோட்டத்தில் புதிய இளைஞர்களின் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும்; தேயிலைச் செடிகளுக்குள் காடுகளைப் போன்று வளர்ந்துக் கிடக்கும் புற்களை வெட்டி அகற்ற வேண்டும்; தேயிலைச் செடிக்கு உரமிடுதலைத் துரிதப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, இப்பணிப்புறக்கணிப்பில் இத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, தோட்டத்தின் உதவி முகாமையாளரிடம் கையளித்துள்ளனர்.
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago