2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காடுகளில் மரங்களை வெட்டுவது அதிகரிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள காடுகளில், பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டும் செயற்பாட்டில், விஷமிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக, பிரதேசமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, நாவுல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நிகுல, குமாரகல, பிபில போன்ற காடுகள் மற்றும் லக்கல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கலுகங்க, ஹரத்தொட்ட, மாஓயா போன்ற காடுகளில் இவ்வாறு தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக, பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில், மாத்தளை மாவட்டச் செயலக பிரிவுக்கு உட்பட்ட காடுகளில், இவ்வாறு மரங்களை வெட்டியோருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், மரம் வெட்டும் செயற்பாட்டில் விசமிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு, மரங்களை வெட்டி காடுகளை அழிக்கும்போது, அது சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமென்பதால், காடுகளிலுள்ள மரங்களை வெட்டுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .