2026 மே 09, சனிக்கிழமை

காட்டுத் தீயால் 25 ஏக்கர் நாசம்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

ஹட்டன் - ஸ்டெதன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 25 ஏக்கர் கருப்பன் தேயிலை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வெள்ளிகிழமை(7) பகல் 12 மணிக்கு இடம்பெற்றதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

ஸ்டெதன் தோட்டப் பகுதியில் வைக்கப்பட்ட தீயால், ருவன்புர பகுதிவரை தீ பற்றி சென்றுள்ளது என்றும் அதனை இனங்கண்ட பொதுமக்கள், பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான வானிலை காரணமாக மிருகங்களை வேட்டையாடுவதற்கே, இதுபோன்ற தீ வைக்கப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யபடவில்லை எனவும் இது தொடர்பில் மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .