Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியாவிலுள்ள பிதுருதாலகால வனத்தில், காட்டுத் தீ ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்புத் தடைகள் அமைக்கும் பணி, இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச வன அலுவலர் அலுவலகம், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.
வரட்சியான வானிலை காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் காடுகள், ஸ்க்ரப் காடுகள் எரிக்கப்படுவதால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது.
இதுபோன்ற தீவிபத்துக்களிலிருந்து வனப்பகுதியைப் பாதுகாக்க நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், வேளாண் சேவைகள் துறை, காவல்துறை, இராணுவம், விமானப்படை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச்சேர்ந்த பிரதேச மக்கள், பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் காட்டுத் தீ பரவாமல் தடுக்க தடைகள் அமைப்பதில் பங்கேற்றனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago