2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

காணாமல் போன சிறுவர்கள் இருவர் ஒப்படைப்பு

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

​இரத்தினபுரி, கொட்டதெனியாவ வத்தேமுல்ல பகுதியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து காணாமற்போன 10 மற்றும் 12 வயதான சிறுவர்களான மாணவர்கள் இருவரும், மீரிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

பெண்ணொருவரினால் இவ்விருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார், அவ்விருவரும் தங்க வைக்கப்பட்டிருந்த இடம், காணாமற் போன முறைமை உள்ளிட்டவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.

அவ்விருவரையும் தேடி கண்டுப்பிடிப்பதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர். இந்நிலையிலேயே அவ்விருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X