Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
தேயிலைக் காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதியளிக்காது என இ.தொ.காவின் உப தலைவரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று பல அரசியல்வாதிகள் இ.தொ.காவை குற்றம் சுமத்தி அரசியல் செய்ய முயல்கிறார்கள். மலையக மக்களுக்கு துரோகம் செய்து அரசியல் செய்யும் அமைப்பு இ.தொ.கா அல்ல. அதனை ஒருபோதும் செய்யாது.
மலையக காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர்.ஆனால் கடந்த காலங்களில் மலையக காணிகளை அபகரிக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டதுபோது இ.தொ.காவே முன்னின்று அதனை தடுத்து நிறுத்தியது என்றார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago