2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காணி உறுதிப்பத்திரம் வழங்கல்

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 260 குடும்பங்களுக்கு, ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், நேற்று  (30) நடைபெற்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 140 குடும்பங்களுக்கும் கேகாலை மாவட்டத்தில் 120 குடும்பங்களுக்கும், ரண்பிம காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகள், இரத்தினபரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியின் கேட்போர் கூடத்திலும், கேகாலை நகர சபை மண்டபத்திலும் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக்க பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக்க, காமினி வலேபொட, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி, கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X