Mayu / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன், டி.சந்ரு
திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொட்டகலை ஜெயராஜன் மாவத்தை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் காரில் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளன.
உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானத்தில், திங்கட்கிழமை (22) இரவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட மின்குமிழ்கள் இரண்டும் தற்போதைய சந்தை பெறுமதி 350.000/= ரூபாய் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் திம்புள்ள - பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
5 hours ago