2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கார்பெக்ஸ் டிவிசனில் ஒருவருக்கு தொற்று

Kogilavani   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

மஸ்கெலியா பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட கார்பெக்ஸ் டிவிசனில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலிருந்த வந்த ஒருவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நபர், கினிகத்தேனை கலுகல பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அறிக்கை நேற்று இரவு கிடைக்கப்பெற்ற நிலையிலேயே அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நபர், தலவாகலை இராணிவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பூப்புனித நீரட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபருடன் தொடர்பைப் பேணிய 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X