Janu / 2025 ஜூலை 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட நான்கு இளைஞர்கள் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை சுரங்கப் பாதைக்கு அருகில் வைத்து வியாழக்கிழமை (17) காலை 8:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
நிட்டம்புவையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி, எதிர் திசையில் பயணித்த கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் -நுவரெலியா மற்றும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துமாறு திம்புல பத்தனை பொலிஸார் ஓட்டுநர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ரஞ்சித் ராஜபக்ஷ,எஸ். சதீஸ்


9 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025