Editorial / 2023 மே 28 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன், சுதத் எச்.எம்.ஹேவா
கால்வாயில் விழுந்து பெண்ணொருவரும், ஏரியில் விழுந்து இளைஞனும் மரணமடைந்த சம்பவங்கள், மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.
மஸ்கெலியா, ஸ்டெஸ்பி தோட்டத்தில் கால்வாயில் சனிக்கிழமை (27) விழுந்து 51 வயதான லெட்சுமி பாலவிதன் என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்தப் பெண் ஒருவகையான நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொணெக் தோட்டத்தின் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை (28) விழுந்த 23 வயதான தோமஸ் ரூபன் மரணமடைந்துள்ளார்.
வட்டவளையில் இருந்து லொணொக் வரையிலும் பயணித்த பஸ்ஸில் பயணம் செய்த இவ்விளைஞன், பஸ்ஸில் இருந்து இறங்கி கங்கவத்த பிரதேசத்துக்குச் செல்வதற்காக நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே ஏரியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago