Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி, சிவாணிஸ்ரீ
காவத்தை அவுப்பே தோட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தற்போது தணிந்துள்ள போதிலும், அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கடமைகளில், ஆயுதம் தாங்கிய பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவத்தை அவுப்பை தோட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை, இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகக் காயமடைந்த மூவர், காவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யுமாறு கோரி, மேற்படி தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், நேற்று (4) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சுமார் 500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், காவத்தை எந்தானை பிரதான வீதியின் தலுகலைச் சந்தியில், பிரதான வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக காவத்தை - எந்தான பிரதான வீதியின் போக்குவரத்து, பல மணி நேரம் தடைப்பட்டது.
மேற்படி சம்பவம் குறித்து அவுப்பை தோட்ட நிர்வாகத்தால் காவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன், தோட்ட நிர்வாகத்தின் தலைமையில் விசாரணைகளை நடத்தினர்.
இதன்போது மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட இரு குழுவையும் சேர்ந்த சிலரைக் கைதுசெய்துள்ளதாவும், இச்சம்பவத்துடன் தொடர்புள்ள மேலும் சிலரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தையடுத்து, அவுப்பை தோட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதால், மேற்படி தோட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago