Editorial / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
வீட்டு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் காயமடைந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், மரணமடைந்துள்ளார் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
யு.கே.பிரியாங்கணி அசோகா (51) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான இவர், வில்கமுவ, வெல்லசந்தியை வசிப்பிடமாகக் கொண்டவர்.
கண்டியிலுள்ள பாடசாலையில் அவருடைய பிள்ளைகள் கல்விக்கற்று வருவதால், பல்லேகலையில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு கொடுத்து அனுப்புவதற்காக, டிசெம்பர் 1ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில், சமைப்பதற்கு தயாரான போதே, வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில், அப்பெண் எரிகாயங்களுக்கு உள்ளானார்.
10 நாள்கள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அப்பெண், கடந்த 10ஆம் திகதியன்று மரணமடைந்துள்ளார் என்றும் பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026