R.Maheshwary / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - நாராங்ஹின்ன பகுதியில், மரத்திலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான 57 வயதான ராமையா சித்ரவேல் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கித்துள் மரமொன்றில் நேற்று மதியம் ஏறிய இவர், திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .