Kogilavani / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம் பாயிஸ்
பலாங்கொடை முல்லகொலமுள்ள கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதால், கிராம மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானைகளில் தொல்லை அதிகரித்துள்ளதால், கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை அச்சம் நிறைந்ததாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிரமாங்களுக்குள் வரும் காட்டு யானைகள், வீட்டுத் தோட்டங்கள், பயன்தரும் மரங்களை அழித்து நாசம் செய்வதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இம்மக்களின் பொருளாதார நிலைமை, பெரும் பாதிப்படைந்து வருவதாகவும், எனவே காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மை மீட்டெடுக்குமாறும், கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago