Kogilavani / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் பகுதியில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (2) வெளியான பிசிஆர் அறிக்கையின் ஊடாக குறித்த இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக, கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி கொழும்பு மற்றும் மஹரகம பகுதியில் இருந்தி வந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களோடு அவர்களது குடும்பங்களை சேர்ந்த பத்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கு, நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மேற்படி இருவருடன் தொடர்பைப் பேணிய 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026