Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 24 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சாமிமலை- கிலனுஜி தோட்டத்தில் நேற்று (23) சுகாதார செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
தோட்டத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில், வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் குளவி கொட்டு போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது சம்பந்தமாகவும் ஏனைய உடல் உபாதைகள் ஏற்படும் தருணத்தில் அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது போன்ற விடயங்கள் குறித்தும் தெளிவூட்டப்பட்டது.
கிலனுஜி தோட்ட நிர்வாகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த செயலமர்வில், மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையின் உதவி வைத்திய அதிகாரி டிலக்ஷி தோட்ட வைத்திய உதவியாளர் புனேஷ்வரன் மற்றும் தோட்ட பணியாளர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .