2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கிளைகளுக்கிடையில் இறுகி சுதேச வைத்தியர் மரணம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

இரண்டு  இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி, சுதேச வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மொனராகலை- படல்கும்பர எத்தாமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 70 வயதான பாராம்பரிய சுதேச வைத்தியரான டீ.எம். கருணாரத்னவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

17ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சென்ற அவர், வீட்டுக்கு திரும்பாத நிலையில், வீட்டார் அருகிலிருந்த இறப்பர் தோட்டத்துக்கு தேடிச் சென்ற போது, இறப்பர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையில் இறுகி உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை படல்கும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X