2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கீறிவிட்டு கணவன் தப்பினார்: குந்தியிருந்த மனைவி சிக்கினார்

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் ஹெரோய்ன் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

முச்சக்கரவண்டிகளை அடையாளம் கண்டு சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியில் இருந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி அங்கு இரண்டு கிராம் 500 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன மற்றுமோர் அதிகாரியுடன் கண்டி- மாத்தளை வீதியில் உள்ள அம்பத்தன்ன பகுதிக்கு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும்  கீறல்கள் ஏற்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X