2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குடாகமவில் குத்துக்கரணம் அடித்த ஓட்டோ

Editorial   / 2023 ஜூன் 11 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கடும் வேகத்தில் பயணித்த ஓட்டோவொன்று, வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளான சம்பவமொன்று ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சனிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பங்கேற்றவர்களை இறக்கிவிட்டு, அங்கிருந்த வட்டவளையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த   ஓட்டோவே இவ்வாறு குடாகமவில் குத்துக்கரணம் அடித்துள்ளது.

சம்பவத்தின் போது ஓட்டோ சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இவ்வனர்த்தத்துக்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டோ கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X