S. Shivany / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணத்தில் குடும்பநல உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்புக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசாமிலை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கோரியுள்ளார்.
குறித்த விடயத்தை வலியுறுத்தி, ஊவா மாகாண ஆளுநருக்கு அவர்
அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்
'ஊவா மாகாண குடும்பநல சுகாதாரத் தாதிகள், மாகாண வைத்திய அதிகாரி அலுவலக கடமைகளுக்கு செல்வதை பகிஸ்கரித்து வருவதால், மாதாந்த சிகிச்சைகளுக்கு இவ் அலுவலகத்துக்கு சமூகமளிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் மட்டுமே குடும்பநல தாதிகள் மேற்படி பணிப் பகிஸ்கரிப்புகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொண்டு வருகின்றனர். இவர்கள் தத்தம் கிராமங்களில் குடும்பநல சுகாதார விடயங்களை மனிதநேயங்களை முன்னிலைப்படுத்தி கண்காணித்துக் கொண்டு வந்த போதிலும், எம். ஓ. எய்ச் என்று கூறப்படும் மாகாண வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மாதாந்தம் இடம்பெறும் கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கான சிகிச்சை கடமைகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. இக்கடமைகளை மட்டுமே, ஊவா மாகாண குடும்ப நல சுகாதாரத்தாதிகள் பகிஸ்கரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஊவா மாகாண குடும்பநல சுகாதாரத் தாதிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய போக்குவரத்து கொடுப்பனவு, முன்பணம், அரசினால் வழங்க தீர்மானிக்கப்பட்ட 'கொரோனா' தொற்று நீக்கும் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் ஆகியனவற்றை வழங்க, ஊவா மாகாண சுகாதாரச் சேவை திணைக்களம் நடவடிக்கை எடுக்காமையைக் கண்டித்தே, இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago