R.Maheshwary / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சாமிமலை- ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று (1) காலை 9 மணியளவில் லயக்குடியிருப்பு ஒன்றில் தீபரவல் ஏற்பட்டதுடன், இதன்போது ஒரு வீடு முற்றாக எரிந்துள்ளது.
24 வீடுகளைக் கொண்ட லயக்குடியிருப்பிலே இத்தீபரவல் ஏற்பட்டதுடன், இத் தீபரவல் ஏனைய வீடுகளுக்கு பரவாமல் பிரதேசவாசிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீபரவலால் பாதிக்கப்பட்ட7 பேரைக் கொண்ட குடும்பத்துக்கு தோட்ட நிர்வாகம் தற்காலிகமாக வீடொன்றை வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இத் தீபரவல் ஏற்பட்ட போது, 3 சிறுவர்கள் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு இதன்போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அயலிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025