Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
ஒரு கிலோகிராம் குரக்கன் விதை 350 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதால், குரக்கன் தொடர்பான உற்பத்திகளில் ஈடுபடுபவர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை-லக்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், குரக்கன் உற்பத்திகளில் இடுபட்டு வருகின்றனர்.
ஒரு கிலோகிராம் குரக்கன் விதைகள் 200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை விலைக்கு வாங்கும் மேற்படி உற்பத்தியாளர்கள், அவற்றை உலர்த்தி, கழுவி, மணலை அகற்றி அரைத்து, பின்னர் குராக்கன் மாவை தயார்செய்து மத்திய மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குரக்கன் விலை அதிகரித்ததால் 350 ரூபாய் கொடுத்து தொகை விலைக்கு அவற்றைப் பெற்றுக்கொள்வதால், தாம் பாரிய நட்டமடைந்துள்ளதாகவும் மேற்படி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மேற்படி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026