Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்' விடுதியை வந்தடைந்தனர்.
இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago