Editorial / 2025 ஜூலை 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருவிட்ட தேவிபஹலலாவில் உள்ள தொடமெல்ல கால்வாய் வழியாக ஹென்யாய காமா வீதிக்குச் செல்லும் வழியில் 26 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹென்யாய, தேவிபஹலலாவைச் சேர்ந்த ஷாலிகா மதுஷானி (26) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்டவின் பாரடைஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரத்தினக் கல் வெட்டும் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார். மாலை 06 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குருவிட்டவில் உள்ள தேவிபஹலலா வீதியில் உள்ள சொய்சா கடே சந்தியில் இருந்து அவரது வீடு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவர் தினமும் அந்த தூரம் நடந்து செல்வதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago