ஆ.ரமேஸ் / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை திறந்த பல்கலைகழகம் நடத்தும் சட்ட முதுமானி பட்டமளிப்பு விழா, நாளை (05), கொழும்பு பி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு நிகழ்வில், குற்றவியல் நீதி நிர்வாகம் பற்றிய சட்ட முதுமானி (L.L.M.In Criminal Jastice Administiation) பட்டத்துக்கு, சட்டத்தரணி சிங்கராஜா மோகனராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் குற்றவியல் நீதி நிர்வாகம் பற்றிய, சட்ட முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த ஒருவர், குற்றவியல் நீதி நிர்வாகம் பற்றிய சட்ட முதுமானி பட்டம் பெறுவது, இதுவே முதன்முறையாகும்.
மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட சட்டத்தரணி சிங்கராஜா மோகனராஜன், நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்துக்குட்பட்ட இராகலை சென்.லெணாட்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த பி.அன்னலெச்சுமி, எம்.சிங்கராஜா தம்பதிகளின் புதல்வராவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை, இராகலை சென். லெணாட்ஸ் தமிழ் வித்தியாலயத்திலும் உயர்தரத்தை, இராகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் பயின்றுள்ளார்.
அத்துடன் தனது சட்டபடிப்புக்காக, கொழும்பு பல்கலைகழகத்தில் சட்டப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், சட்டமானி சிறப்பு பட்டத்தை, 2009ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.
உயர் நீதிமன்றம், மேல் நீதி மன்றம் உள்ளிட்ட அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்காடும் வழக்கறிஞ்ஞரான இவர், தற்போது குற்றவியல் நீதி நிர்வாகம் பற்றிய சட்ட முதுமானி பட்டம் பெற்றுகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago