2025 ஜூலை 05, சனிக்கிழமை

குளவித் தாக்குதல்; 15 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் வைத்திசாலையில்

Editorial   / 2019 டிசெம்பர் 14 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை மண்ராசி பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 15 சிறுவர்கள் உள்ளிட்ட  28 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்ராசி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் திடீரென கழுகு ஒன்று குளவிகளின் கூட்டை தாக்கியுள்ளது.

இதனால் குளவிகள் கலைந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களையும், மைதானத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பில் உள்ளவர்களையும் தாக்கியுள்ளன..

குளவிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக சிலர் அருகிலிருந்த ஆற்றில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .