2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

குழந்தைக்கு சிகரெட் சூடு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எம். செல்வராஜா   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வயதும் 10 மாதங்களு​மேயான குழந்தையொன்றை, பல மாதங்களாகச் சிகரட்டால் சூடு வைத்து வந்த சந்தேகநபரையும் குழந்தையின் தாயையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்ற நீதிபதி, இன்று (16) உத்தரவிட்டார்.  

சியம்பலாண்டுவ - 5ஆம் இலக்கப் பிரதேசத்தில் வசித்து வந்த இருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தனது குழந்தையுடன், கணவரிடமிருந்து பிரிந்து வந்துள்ள பெண்ணொருவர், மேற்படி சந்தேகநபருடனேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், குழந்தையின் உடலில், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டமை தொடர்பில், தாயார் கவனத்தில் கொண்டிருக்காத நிலையில், இது தொடர்பாக, அயல் வீட்டிலிருந்தோர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில், பொலிஸாரால் சில நாள்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச்சென்ற நபர், தலைமறைவாகியிருந்தார்.  எனினும், பெண் பொலிஸ் அதிகாரி​யொருவர், சிவில் உடையில் சென்று, சந்தேகநபருடன் சில நாள்கள் உரையாடி, ஓரிடத்துக்கு வரவழைத்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளாரெனவும்  சூடு வைக்கப்பட்ட குழந்தை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சந்​ேதக,  நபர்கள், 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .