2025 மே 10, சனிக்கிழமை

குழந்தை உட்பட பெண் மீது தாக்குதல்; மூவர் கைது

Editorial   / 2018 ஜூன் 22 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதிஸ்

பொகவந்தலாவ கொட்டியாகொல தோட்டத்தில், பெண்ணொருவரின் வீட்டுக்குள் நுழைந்து குறித்த பெண்ணையும் அவரது ஒன்றரை வயது குழந்தையையும் பொல்லால் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில், அதே தோட்டத்தைச் சேர்ந்த மூவரை, பொகவந்தலாவ பொலிஸார், இன்று (22) கைதுசெய்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் அவரது பெண் குழந்தையும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டக் காணி ஒன்று தொடர்பாக இருசாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே, தாக்குதல் சம்பவத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X