2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’கூட்டணிக்கு மக்கள் பலம் இல்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு, மக்கள் பலம் குறைவு என்பது, தலவாக்கலை ஆர்ப்பாட்டத்தினூடாக அம்பலமாகியுள்ளதெனத் தெரிவித்துள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், இந்த ஆர்ப்பாட்டத்தால், எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தலவாக்கலை போராட்டம் தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைவிட, மூன்றில் ஒரு பங்கு கூட உறுப்பினர்கள் அங்கத்துவமல்லாத ​தொழிற்சங்கங்கள், கூட்டொப்பந்தம் தொடர்பில் தமக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது எனக் குறிப்பிட்டதுடன், இ.தொ.காவின் தலைவரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான் வீதிக்கு இறங்கினால்,​ இதைவிட பத்து மடங்கு மக்கள் அணிதிரள்வர் எனறும் கூறினார்.

இந்தமுறை கூட்டொப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

பிரதேச சபைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தற்போது சிலர் தம்பட்டம் அடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால், தங்களது காலத்தில், பிரதேச சபைகளூடாக அபிவிருத்தித் திட்டங்களைத் தோட்டங்களுக்குக் கொண்டுச் சேர்ப்பதில் எந்தவிதமான தடைகளும் தமக்கு ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், செந்தமிழில் பேசி, பிறரை மட்டந்தட்டிப் பேசுவதை நிறுத்திகொள்ள வேண்டும் எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X