2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’கூட்டுஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளும் வர்த்தமானியில் உள்வாங்கப்பட வேண்டும்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள நிர்ணயச்சபையினூடாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள 1,000 ரூபாய் சம்பள உயர்வு வர்த்தமானியில் வெளியாகும்போது, கூட்டுஒப்பந்தத்திலுள்ள முக்கிய சரத்துகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்று, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர்களுக்கான வழமை மாறாத வரப்பிரசாதங்கள், நலன்புரித் திட்டங்கள், வேலை வழங்க வேண்டிய நாட்கள் என்பவையும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 

நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொர்ந்துரைத்த அவர், மலையக மக்களை வஞ்சிக்காது, வேலைப் பளுவை அவர்கள் மீது திணிக்காது, அவர்களுடைய தொழில் பாதுகாப்பு, தொழில் உரிமை நலன்புரிதிட்டங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வர்த்தமானியாக வெளியிடப்படும்போது, கூட்டுஒப்பந்தத்தில் உள்ள முக்கிய சரத்துக்களும் வர்த்தமானியாக்கப்படுதல் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X