Kogilavani / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட அறிவிப்பை வெளிப்படையாக அறிவிக்கவும்
அடிப்படைச் சம்பளமாகவே 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்
வீதிக்கு இறங்க நேரிடும்
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை இயங்கும் தொழிற்சங்கங்களால் பயனில்லை
எஸ்.சதீஸ்
இம்முறை நடைபெறவுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மைப் பேணப்பட வேண்டும் என்று, ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் சன்முகம் திருச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையை இரகசியமாக நடத்தாமல், வெளிப்படைப் பேச்சாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில், நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும் என்றார்.
இவ்விடயத்தில், பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரை எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்றுத் தெரிவித்த அவர், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1,000 ரூபாய் சம்பளம் அடிப்படைச் சம்பளமாக அமையாவிட்டால் தொழிலாளர்களுக்காக, வீதியில் இறங்கிப் போராடுவதற்கு, ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் தயாராகவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையிலும் பொருத்தமான தொழிற்சங்கம் ஒன்று காணப்படவில்லை என்றும் இருந்தத் தொழிற்சங்கங்களின் ஊடாக மக்கள் எவ்விதப் பயன்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
'எமது மக்கள் தொழிற்சங்க ரீதியாக பாதுகாக்கப்படவில்லை. எனவே, எமது மக்களின் பாதுகாப்புக்காகவும் சிறந்த தலைமைத்துவத்தின் அவசியத்தை உணர்ந்தும் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டம் மலையக மாவட்டமாகக் கருதபடுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், இந்த மாவட்ட மக்களுக்கு எவ்விதச் சலுகைகளும் கிடைப்பதில்லை என்றும் சாடினார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026