2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கூட்டு ஒப்பந்தத்தில் இறுதி தீர்வு காணும்வரை கறுப்பு ஆடை

ஆ.ரமேஸ்   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு காணும் வரை, கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார். 

அலுவலக கடமை நேரத்திலும் கள நடவடிக்கைகளின் போதும், கறுப்பு நிற ஆடை அணிந்து செல்லுமாறும், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

கூட்டு ஒப்பந்த விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை, இதனைக் கடைபிடிக்குமாறும் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி அறிவுறுத்தியுள்ளதாக, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் மேலும் தெரிவித்தார்.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .