Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 20 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தனி வீட்டு திட்டத்தின் கூரைத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் (18) மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வழியே தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் குறித்த வீட்டின் கூரைகள் கழற்றப்பட்டுள்ளதை கண்டு , தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
குறித்த தனிவீட்டுத் திட்டம் முழுமையாக நிறைவடையாமல் கைவிடப்பட்டுள்ளமையால் பொருட்களும் சூறையாடப்பட்டு வருவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து இந்த குடியிருப்புக்களை முழுமைப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .