Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 13 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
கேகாலை- பிரான்சிஸ் மொலமுரே மாவத்தையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 5945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு, லொறியொன்றில் 3000 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற போது, 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை, கனேமுல்ல மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பகுதியிலேயே இன்று (13) அதிகாலை 2945 லீற்றர் டீசலுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பொல்கஹாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்கள் ஐவரையும் கேகாலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .