Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
கேகாலை மாவட்டத்தில் இதுவரை 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கேகாலை மாவட்ட தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் சுஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ருவன்வெல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் மாவனெல்ல, ரம்புக்கன, கேகாலை, எட்டியாந்தோட்டை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா மூன்று தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
அதேப்போல் கலிகமுவ, வரகாபொல ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா இருவரும் அரநாயக்கவில் ஒரு தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
எனவே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற நான்காது பூஸ்டர் தடுப்பசியை பெற்றுக்கொள்ளுமாறும் இதுவரை கேகாலை மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை 6,36,397 பேரும் இரண்டாவது தடுப்பூசியை 2,96066 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .